உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நெடுந்தீவுக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்த இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஒரு படகு பழுதாகிய நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில்  தத்தளித்துக்கொண்டிருந்த போது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.தற்போது படகும் மீனவர்களும் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்