Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



images0MJZ1G9A16 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மிரட்டிக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.யாழ். கஸ்தூரியார் வீதிப் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றின் தங்கக் கட்டிகளே நேற்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ். கஸ்தூரியார் வீதிப் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் கொழும்பில் இருந்து 263 கிராம் தங்கக் கட்டிகளை கொண்டு வந்து அவற்றை யாழ். நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தினமும் வைப்பது போன்று வைத்துள்ளார்.பின்னர் அந்த தங்க கட்டிகளை மீள பெற்றுக் கொண்டு கடையில் வேலை பார்க்கும் இளைஞர் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பணியாளர் மூலம் அறிந்த கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.குறித்த 263 கிராம் தங்கமும், 16 இலட்சத்து 29 ஆயிரத்து 230 ரூபா பெறுமதியானதென்றும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்