Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



filming_man_killed_001உலக நாடுகளுக்கு பெறும் அச்சுறுத்தலாக மாறி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தங்களிடம் சிக்கிய பிணைக் கைதிகளின் தலையை துண்டித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்து வந்தனர்.இந்நிலையில் தீவிரவாதிகளின் அலுவலகத்தை வீடியோ எடுத்தவரை சிலுவையில் கட்டித் தொங்க விட்டுள்ளனர்.வடக்கு சிரியாவில் அலெப்போ மாகாணத்தில் அல்–பாப் நகரில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தை வீடியோ எடுத்தவரை பிடித்த தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்று, சடலத்தை சிலுவையில் கட்டி தொங்க விட்டனர்.மேலும் அவர் செய்த குற்றங்களை எழுதி சடலத்தில் ஒட்டியிருந்தனர். அதில் கொல்லப்பட்டவர் பெயர் அப்துல்லா அல்–புஷ். செய்த குற்றம்–500 துருக்கி லிரா அதாவது 15 ஆயிரம் ரூபாய்க்காக வீடியோ படம் எடுத்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உளவு பார்ப்பவர்கள் மற்றும் தங்களது மதத்தில் இருந்து பிரிந்து செல்பவர்களுக்கு இது போன்ற தண்டனையை தீவிரவாதிகள் வழங்குகின்றனர்.கொல்லப்பட்டவர்களை 3 நாட்கள் சிலுவையில் கட்டி தொங்க விடுகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்