உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


imagesP6DITBS6ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேருவதற்காக சென்ற மூன்று சிறுமிகள் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை ஐஎஸ்ஐஎஸ் உருவாக்கியுள்ளனர்.உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைவது அதிகரித்துள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலிருந்து வந்த 15, 16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுமிகள் ஜேர்மன் ப்ராங்பர்ட் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்தவுடன், தாங்கள் மூவரும் துருக்கிக்கு படிக்கவே செல்கிறோம் என பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் 15, 16 வயது சிறுமிகள் இருவரும் சோமாலியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.இவர்கள் காணாமல் போனதாக பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்ததையடுத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்