தமிழில் எழுத
பிரிவுகள்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டது. அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வருமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு, நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன் என இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய தீவிரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையே தவிர குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். மேலும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்