உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பாரசீக வளைகுடாப் பகுதியில் சுற்றித் திரிந்த, ஐரோப்பாவை சேர்ந்த இரண்டு ஆளில்லா உளவு விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் இதை மறுக்கிறது.ஒருவேளை மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல் அல்லது அமெரிக்கா மீது ஈரான் போர் தொடுக்குமானால், அதை எதிர் கொள்வதற்காக, ரஷ்யாவின் உதவியை “நேட்டோ’ நாடி, ஓர் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் ஈரானை தொடர்ந்து உளவு பார்த்து வருகின்றன. ஈரான் வான் எல்லையை கடந்து பாரசீக வளைகுடாப் பகுதியில், நேற்று உளவு பார்த்து கொண்டிருந்த இரண்டு ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஈரான் ராணுவ தளபதி அமிர் அலி ஹாஜிஜடேஹ் கூறியதாவது: பாரசீக வளைகுடாப் பகுதியில் இரண்டு மேற்கத்திய உளவு விமானங்களையும் சுட்டு தள்ளி விட்டோம். இதுபற்றி இப்போது தான் வெளியே கூறுகிறோம். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் எதிரிகள் இதுபோன்ற விமானங் களைப் பயன்படுத்துகின்றனர். அவ்வப்போது அவை எங்கள் வான் எல்லைக்குள் வந்து விடுகின்றன. எதிரிகளை முழுமையாக கண்காணித்து வருகிறோம். இவ்வாறு ஹாஜி ஜடேஹ் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்