உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்முறிகண்டியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுமாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டி ஏ9 வீதியில், இன்று காலை 9.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இரண்டு பெண்கள் வீதியை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு செல்வதற்காக குறித்த இருவரும் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.விபத்துடன் தொடர்படைய டிப்பர் வாகனத்தின் சாரதி தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்