உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்sinha_CIதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு கடந்த 8ம் திகதி நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு மூன்று மணித்தியாலங்கள் வரையில் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து நாட்டின் பிரதான சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு கட்சிகளும் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதி தேர்தலில் எவ்வாhறன தீர்மானம் எடுப்பது என்பது குறித்து இன்னமும் திட்டவட்டமான தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார்.அதேபோன்று யாருக்கு ஆதரவளிப்பது என்பதனை இன்னமும் நிர்ணயிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் குறிப்பிட்டிருந்தார்.இவ்வாறான ஓர் பின்னணியில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை அவசரமாக அழைத்து இந்திய உயர்ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடத்தியமை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்