உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பணத்தை கையாடல் செய்த மற்றும் திருடிய மூத்த ஜிகாதி தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.டீர் எசார் மாகாணத்தில் சிரியாவை சேர்ந்த, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த ஜிகாதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளான், அவனது உடல் தொடங்கவிடப்பட்டுள்ளது,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஜிகாதி இஸ்லாமியர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளான் என்றும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பணத்தை கையாடல் செய்துள்ளான. என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்று பிரிட்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.தீவிரவாத குழு தண்டிக்கப்பட்ட ஜிகாதியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என்றும், அவனுடைய பெயர் ஜலாய்பீப் அபு முன்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவருடன், தீர்ப்பு விவரங்கள் அடங்கிய கையால் எழுதப்பட்ட ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் தீவிரவாதியின் செயல்பாடு குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தீவிரவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தீவிரவாதிக்கு தண்டனை கொடுக்கப்பட்டது தீவிரவாதிகள் பிடியில் உள்ள பகுதியில் ஒலிபெருக்கிகள் வழியாக தெரிவிக்கப்பட்டது என்றும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.சிரியா, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை பிடித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். கடத்தல் கச்சா எண்ணெய் விற்பனை மூலம்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் இப்போது ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்க தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரம் மேலும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்