உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்திருகோணமலை – வவுனியா பிரதான வீதியின் பன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.  இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்சொன்றும், கெப் வாகனம் ஒன்றும் நேற்று மாலை மோதி, விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.   திருகோணமலையில் இருந்து கோமரங்கடவெல நோக்கிப் பயணித்த பஸ்சொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் கோமரங்கடவெல, மகாதிவுல்வெவ மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்