Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



saudi_refuses_002ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த சவுதி அரேபிய விமானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது, தாக்குதல் நடத்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்த சவுதி அரேபிய விமானிகள் மறுத்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த தகவலை ஈராக்கின் அரசியல் நிபுணர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.மேலும் இத்தகைய தாக்குதல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சவுதியின் முக்கிய அரசியல் தலைவர்கள் எண்ணுகின்றனர்.இதுகுறித்து ஈராக் அரசியல் ஆய்வாளர் சாஜத் ஜியாத் ( Saajath Jiyaath) கூறியதாவது, சவுதி விமானிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மறுத்து வருவது உண்மை தான் என்றும் இதை அவர்கள் உறுதி செய்துள்ளனர் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்