உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சென்னையில் குடும்ப பிரச்சினையில் மருமகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, தி.நகர் மேட்லி ரோடு 2வது தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (29). எம்.பி.ஏ. பட்டதாரி. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், கால் டாக்சி ஓட்டுநராக பணி செய்து வந்தார்.இந்நிலையில், அவரது தாயார் ஹாஜி நிஷா அவருக்கு பெண் தேடினார். பெண்ணின் பெயர் ஷாகின் 25. பட்டப்படிப்பு படித்திருந்தார். இருவருக்கும் கடந்த மார்ச் 23ம் திகதி திருமணம் நடைபெற்றது.திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மாமியார் நிஷா தலையிட்டார். இது மருமகளுக்கு பிடிக்கவில்லை. கணவன், மனைவி பிரச்சனையில் ஏன் உங்கள் தாயார் தலையிடுகிறார்.நமது விடயத்தில் அவர் தலையிட்டால் எனக்கு பிடிக்காது என்று கணவரிடம் தெரிவித்துள்ளார். இதில் தாயாருக்கு ஆதரவாகவே அமீது பேசியுள்ளார்.இந்நிலையில், மாமியாரும், மருமகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கோபத்தின் எல்லைக்கு சென்ற ஹாஜி நிஷா அடுப்பில் கொதித்துக் கொண்டு இருந்த எண்ணெயை எடுத்து மருமகள் மீது எடுத்து ஊற்றியுள்ளார்.தொடர்ந்து கதவை வெளிப்புறமாக சாத்தி விட்டு மாமியார் அங்கிருந்து சென்று விட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவர் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார்.ஷாகினின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து மாம்பலம் பொலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் பகலவன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடம் விரைந்து மருமகளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.கை, கால், முகம், மார்பு என அனைத்து இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷாகின் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து மாமியார் ஹாஜி நிஷா மீது பொலிசார் கொலை முயற்சி வழக்கு செய்து கைது செய்தனர்.தாயார் சிறைக்கு சென்று விட்டதால், என்று தெரியாமல் தவித்த சாகுல், சைதாப்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அப்போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த ரயில் சாகுல் அமீது மீதி ஏறி உயிரை பறித்தது.

அவரது உடலை மீட்ட பொலிசார் அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்