உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.நாட்டின் ஏனைய மக்களை விட தமிழ் மக்களுக்கு தனியான பிரச்சினைகள் இருக்கின்றன. யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்த்தல், மக்களின் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படுவது போன்றவை இவற்றில் முக்கிய பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகள் குறித்து முக்கிய இரு வேட்பாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.ஐ.தே கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அரசு தரப்பினர் மேடைகளில் தெரிவிப்பது முட்டாள்தனமானதாகும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த தரப்புடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவதென்பதை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்