உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledநடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.தென்கொரியாவிலிருந்து அமெரிக்கா நோக்கி 240 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 777-200 அமெரிக்க விமானம் ஜப்பானை நெருங்கிய போது, திடீரென விமானத்தை பனிப்புயல் சூழ்ந்துள்ளது.அப்போது விமானத்தில் பயங்கர நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் நிலைமையை சமாளித்து கொண்ட விமானி உடனடியாக விமானத்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.இச்சம்பவத்தால் விமானத்தில் படுகாயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து பயணிகள் கூறுகையில், விமானியின் பெரும் முயற்சியால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாலேயே நாங்கள் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளோம் என்றும், உயிர்சேதம் ஏதும் ஆகாதது மகிழ்ச்சியை தருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்