உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்Unavngivetமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், சவுக்கடிக்  கடலுக்கு வியாழக்கிழமை 18 காலை மீன்பிடிப்பதற்காக ஒன்பது மீனவர்கள் சென்ற படகு, கவிழ்ந்ததால்  மீனவர்  ஒருவர் காணாமல போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், ஏனைய எட்டு மீனவர்களும் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.  ஏறாவூர், ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி சிறிதரன் வயது 22 என்பவரே  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன மீனவரை தேடும் பணி முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறினர். கரைவலையை  கடலில் விரித்துக்கொண்டிருந்தபோது, பாரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறினர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்