உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் உரையாற்றும் போதே அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் பொது எதிரணியினர் வடபகுதியில் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு  மைத்திரிபால சிறிசேனா நேற்றைய தினம் அழைப்பு  விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்