உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledசவுதி அரேபியாவில் பாலியல் வழக்கில் பெண்ணின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில் பாலியல், திருட்டு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.பொது இடத்தில் தலை துண்டித்தல் மற்றும் கல்லால் அடித்து மரண தண்டனை ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன.இந்த நிலையில் பாலியல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் தலை துண்டித்து மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. அவரது பெயர் லைலாபிந்த் அப்துல் முத்தலிப் பாசிம்.பர்மாவை சேர்ந்த இவர், மெக்கா நகரில் தங்கியிருந்தார். அப்போது வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்திருந்தார். அதற்காக தனது 7 வயது வளர்ப்பு மகளை கொலை செய்துள்ளார்.அதற்காக அவரது தலையை துண்டிக்கும்படி தண்டனை வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, அவரை 4 பொலிசார் நடுத்தெருவுக்கு இழுத்து வந்து நிறுத்தினர். பின்னர் அவரது தலையை நீளமான வாளால் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்