உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமுகமது நபியை அவமதிக்கும் பேஸ்புக் பக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.நபியை அவமதிக்கும் குறிப்பிட்ட பக்கங்களை நீக்காவிட்டால், நாடு முழுவதும் பேஸ்புக் சமூகவலைத்தளம் தடை செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.இதனை தொடர்ந்து நேற்று விமர்சனத்துக்கு உள்ளான சில பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.இருப்பினும் முகமது நபியை அவமதிக்கும் பக்கங்கள் உபயோகத்தில் இருப்பதாகவும், அவைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.பாரிஸ் பத்திரிக்கை அலுவலகத் தாக்குதலை தொடர்ந்து, இணையதளங்களில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுன்றனவா என விசாரிக்க துருக்கி நாட்டு வழக்கறிஞர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.இந்த விசாரணையின் முடிவாக பேஸ்புக் பக்கங்களில் முகமது நபியை பற்றி அவதூறான செய்திகள் வருவதை கண்டறிந்து அவற்றை நீக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தனர்.இதன் விளைவாகவே நபிகளை அவமதிக்கும் பக்கங்களை நீக்க பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்