உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர்க்கும்  வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று முதலமைச்சரின் இல்லத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இன்று காலை விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இன்று காலை 9.30 மணிக்கு வடக்கு முதல்வரைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து யாழ். பொதுநூலகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன்  பிற்பகல் 2மணிக்கு நலன்புரி முகாம் மக்களையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்