உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledஅமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னணியில் சவுதி அரச குடும்பம் இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி, அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினர்.இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார், இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர்.ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான இவர் வாக்குமூலம் அளித்தார்.அதில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி உதவி அளித்தார்கள் என தெரிவித்துள்ளார்.இதனை சவுதி அரேபியா அரசு மறுத்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்