Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகொலம்பியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் வீடியோவாக வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 4ம் திகதி போகோடாவின் எல் டொராடோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரியோநிக்ரோ நோக்கி விவாகொலம்பியா(VivaColombia Flight 8023) என்ற பயணிகள் விமானம் கிளம்பியது.விமான ஓடுபாதையில் இருந்து எழும்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் வலது இறக்கையில் தீப்பற்றி கொண்டுள்ளது.அப்போது ஆபத்தை உணர்ந்த விமானிகள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புக்கொண்டு, அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினர்.இந்த அதிர்ச்சிகரமான காட்சிகளை விமானத்திலிருந்த பயணி ஒருவர் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.இவ்விபத்து குறித்து அந்த பயணி பேசியதாவது, விமானம் உயர எழும்பிய உடனே வலது இறக்கையில் தீப்பற்றியது என்றும் இதை பார்த்ததும் விமானம் வெடிக்க போகிறது என பயணிகள் அனைவரும் கதறியுள்ளனர் எனவும் பேசியுள்ளார்.விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கிய விமானிகள் கூறுகையில், விமானம் எழும்பியதும் ஒரு வெடிச்சத்தம் கேட்டதாகவும், விமானத்தின் வலது சக்கரங்கள் வெடித்திருக்கலாம் என சந்தேகித்தாகவும் கூறியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் கூறியதாவது, விமானத்தின் என்ஜின் பழுதடைந்ததால் வலது இறக்கையில் தீ ஏற்பட்டதாக விமானிகள் கண்டுபிடிதுள்ளனர்.மேலும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியபோதும்,கணப்பொழுதில் உயிர் தப்பிய பயணிகளால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்