உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஇலங்கைப் பிரஜைகளுக்கு, இந்தியா ஒன் அரைவல் வீசா வழங்கத் தீர்மானித்துள்ளது.நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் பிரஜைகளுக்கு இந்தியா, ஒன் அரைவல் வீசா வழங்கி வருகின்றது.எனினும், இந்த நாடுகளின் பட்டியலில் இதுவரையில் இலங்கை இடம்பிடிக்கவில்லை.அல் கைதா, தலிபான் போன்ற தீவிரவாதிகள் இலங்கையைக் களமாகப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் ஊடுறுவிவிடக் கூடுமென்ற அச்சம் காரணமாக இவ்வாறு இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கப்படவில்லை.புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்திற்கு சமாந்திரமாக இவ்வாறு இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கப்பட உள்ளது.எதிர்வரும் காலங்களில் இலங்கையர்கள் முன்கூட்டியே வீசா பெற்றுக்கொள்ளாது, இந்திய விமான நிலையத்தில் வீசாவை பெற்றுக்கொள்ள முடியும்.முதல் கட்டமாக அரசாங்க அதிகாரிகளுக்கு இந்தியா ஒன் அரைவல் வீசா வழங்க உள்ளது.அடுத்த கட்டமாக அனைத்து இலங்கையர்களுக்கும் வீசா வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்