உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சித்திகள் தந்தருளும் சித்தி விநாயகப் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான விகிர்தி வருடம் ஆவணித்திங்கள் 15ம் நாள் (31.08.2010) செவ்வாய்க்கிழமை  உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து ஆவணிச்சதுர்த்தி நன்னாளை (11.009.2010) இறுதி நாளாகக் கொண்டு 12 நாட்களும் அலங்கார உற்சவம் இடம்பெறுவதாக ஆலய பரிபால சபை   அறிவித்துள்ளது 

 


 

பண்டத்தரிப்பு சாந்தையம்பதி
அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
விகிர்தி வருட (2010)

அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

 ஐங்கரனை மனமுருக தொழுமனமே உன்
 ஐம்புலனும் ஐங்கரன் பாதத்தில் வைத்திடவ
நீர் கேட்தெல்லாம் அருள் தருவான்
 சாந்தையூர் சித்தி விநாயகனே  

சித்திவிநாகர் அடியார்களே,
திருமூலரால் சிவபூமியென போற்றப்பட்ட இலங்கை மாமணித்தீவின் வடபால் யாழ்ப்பாணத்தின் வடமேற்கு திசையில் தமிழும்,சைவமும் சிறப்புற்று ஓங்கும் மருதமா மண்ணாம் சாந்தையம்பதி என்னும் புண்ணிய சேஷ்திரத்தில் சித்திகள் தந்தருளும் சித்தி விநாயகப் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான விகிர்தி வருடம் ஆவணித்திங்கள் 15ம் நாள் (31.08.2010) செவ்வாய்க்கிழமை ஸ்ப்தமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும்,சித்தியோகமும் கூடிய சுபகாலத்தில் உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து ஆவணிச்சதுர்த்தி நன்னாளை (11.009.2010) இறுதி நாளாகக் கொண்டு 12 நாட்களும் அலங்கார உற்சவம் இடம்பெறுவதற்கு சித்திவிநாயகப் பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.  

மஹோற்சவ பிரதம குரு:சிவசிறி பேரின்பநாதக்குருக்கள் இன்பராஐக்குருக்கள்
(
பணிப்புலம் முத்துமாரியம்பாள் பிரதம குரு) 

 ஆலயக்குரு:
சிவசிறி வே.பாலசுப்பிரமணிய ஐயா
(
பணிப்புலம் முத்துமாரியம்பாள் தேவஸ்த்தானம்)
 

 
உதவிஅர்ச்சகர்;:
சிவசிறி பால வெங்கடேஸ்வர ஐயா  

அலங்கார உற்சவ உபயகாரர் விபரம்
ஆம் திருவிழா திரு..விக்னேஸ்வரன் குடும்பம் (கனடா)
2
ஆம் திருவிழா திரு.சி.வீரசிங்கம் குடும்பம் (சாந்தை
)
3
ஆம் திருவிழா திரு.நானு றங்கநாதன் குடும்பம் (இத்தாலி
)
4
ஆம் திருவிழா திரு.வே,இராசையா குடும்பம் (சாந்தை
)
5
ஆம் திருவிழா திரு..செல்லத்துரை குடும்பம் (சாந்தை
)
6
ஆம் திருவிழா திரு. விஐயானந்தன் குடும்பம் (நேர்வே
)
7
ஆம் திருவிழா திரு.. சிவப்பிரகாசம் குடும்பம் பணிப்புலம்
)
8
ஆம் திருவிழா திருமதி சி.இலங்கேஸ்வரி (காலையடி
)
9
ஆம் திருவிழா திரு. மு.குமாரசிவம் குடும்பம் (சாந்தை
)
10
ஆம் திருவிழா திரு.பூ.தனபாலசிங்கம் குடும்பம் (காலையடி
)
11
ஆம் திருவிழா சப்பறத்திருவிழா திரு.பொ.ஐயச்சந்திரன் குடும்பம் (இத்தாலி
)
12
ஆம் மஞ்சத்திருவிழா திரு..சுப்பிரமணியம் குடும்பம் (கனடா)
 

மங்களவாத்தியம்
திரு சிவகுமார் குழுவினர்
பூமாலை அலங்காரம்
திரு.இராசலிங்கம்
பரமேஸ்வரன்

உற்சவ காலத்தில் ஆசார சீலர்களாக வருகை தந்து விநாயகர் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
சுபம்
 

சாந்தை,பண்டத்தரிப்பு  

 இங்ஙனம்
ஆலய பரிபால சபை
 

 செய்தி அனுப்பி வைத்தவர்
ஜெகநாதன் நிவர்சன்
 


 

  

  

One Response to “சாந்தை சித்திவிநாயகர் அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்”

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்