உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் இருந்த சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றதாக இதன் போது பேருந்தின் முன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பேருந்து சாரதி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனை அடுத்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த காலங்களிலும் தனியார் மற்றும் அரச பேருந்துகள் மீது இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்