உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் 

untitledபிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி (வயது 76) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை  பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..ஆர்.சி சக்தி மறைவு குறித்து தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.மறைந்த ஆர்.சி. சக்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள புழுதிக்குளத்தில் பிறந்தவர் ஆர்.சி.சக்தி. சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வம் இல்லாமல் நாடகத்தில் கவனம் செலுத்தினார். ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இதில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார்.தர்மயுத்தம், மனிதரில் இத்தனை நிறங்களா?, பத்தினிப்பெண், தாலி தானம்,  ஸ்பரிசம், சிறை, வரம், உண்மைகள், கூட்டுப்புழுக்கள், மனக்கணக்கு  உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. 1980 களில் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘சிறை’ படம் ஆர்.சி. சக்திக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அனுராதா ரமணன் எழுதிய கதையை தழுவி இப்படத்தை அவர் இயக்கி இருந்தார்.கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்