உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியை பொலிஸ் அதிகாரிகள் சாலையில் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியான முகமது நஷீத்(வயது 47) என்பவர் தற்போதைய எதிர்க்கட்சி தலைவராய் பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, அந்நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து முகமது நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால், அவர் பதவி விலக நேர்ந்தது.இந்நிலையில் நஷீத் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் எழுப்பபட்டதையடுத்து, அவரை பொலிசார் கைது செய்துள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிசார் முயன்றுள்ளனர்.ஆனால் அப்போது அவர் நிருபர்களிடம் பேச முயற்சித்துள்ளதால், அவரை பொலிசார் தடுத்துள்ளனர்.மேலும் அவர் ஒத்துழைப்பு கொடுக்காததால், பொலிசார் அவரை தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.இதற்கிடையே அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழக்க மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சார்பில் வழக்கறிஞரை நியமனம் செய்ய மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்