உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட இருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தின் உய்யன்கொண்டான் குளத்திற்கு அருகாமையில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.குளத்திற்கு அருகாமையில் மீட்கப்பட்ட சடலங்கள் மகாத்மாகாந்தி ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உய்யன்கெண்டானைச் சேர்ந்த 21 வயதான செல்வம் என்பவரும், ரெட்டைவாசிக்காலைச் சேர்ந்த 42 வயதான ஜீ.அசோக் என்பவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.அசோக் என்பவர் இலங்கைத் தமிழர் எனவும், கடந்த பத்து ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வந்தார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.சில தினங்களுக்கு முன்னதாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சடலங்கள் நேற்றைய தினமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்