உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Unavngivetசோயா மீற் 65

சோயா -மீற் 100 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

சிக்கன் 65 மசாலா – ஒரு தேக்கரண்டி

கடலை மாவு – 50 கிராம்

மிளகாய்த் தூள் – தேவையான அளவு

கரம் மசாலாத் தூள் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

சோயா வில் சூடான தண்ணீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

சோயா மீற் ஊறிய பின்னர் தண்ணீர் முழுவதையும் பிழிந்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்து எடுக்கவும்.பின்பு அரைத்த சோயாவை ஒரு பாத்திரத்தில் போட்டுஎண்ணெய் தவிர மேலே சொன்ன மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். உருண்டை பிடிக்கும் அளவிற்கு இருந்தால் போதுமானது. அதிக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி. தாட்சியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சோயா மீற் 65 தயார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்