Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesG37R6QHPதமிழ் மக்கள் எந்த மாற்றத்தையும் இதுவரையில் உணரவில்லை என முன்னாள் அமைச்சரும், ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் எவ்விதமான நலன்களையும் இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித காத்திரமான தீர்வுகளையும் முன்வைக்கவில்லை எனஅ வர் குற்றம் சுமத்தியுள்ளார்.தேசிய நிறைவேற்றுப் பேரவையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என பேரவையில் அங்கம் வகிக்கும் தரப்பினரே கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த நபர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.தேசிய நிறைவேற்றுப் பேரவையில் எவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன என்பது பற்றி தமிழ் மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் நூறு நாள் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித நலன்களும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் முனைப்பு காட்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்