உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நஷீட்டுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.நஷீட்டின் ஆட்சி காலத்தில் 2012ம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழு நேற்று தீர்ப்பளித்துள்ளது.மொஹமட் நஷீட்டின் கைது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என அவரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை நஷீட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்பு சாட்சிகள், பொலிஸார் மற்றும் நீதிபதிகளால் பயிற்சியளிக்கப்பட்டுள்ள சாட்சிகள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி யாமின் அப்துல் கையூமை எதிர்த்துப் போட்டியிட மொஹமட் நஷீட் தீர்மானித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்