உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்saanthai-ther-2செந்தமிழும், சைவமும் செழித்துலங்கும் யாழ்ப்பாண குடாநாட்டின் வட-மேல் பகுதியில்; பரம்பரை பரம்பரையாக; மொட்டறாது மலர் பறித்து, மலர் மாலை புனைந்து, இ்றைவனுக்கு சூடி, அலங்கரித்து; பண்ணோடு பாமாலை பாடி (சூடி), சங்குநாதம் செய்து இறைவனை மகிழ்விக்கும் இறை பணிகளைச் செய்யும் ”அருளனுபவ கருவூலம்” என சிறப்பாக அழைக்கப் பெறும் “பண்+ஆரம்” குலமக்கள் செறிந்து வாழும் ”சாந்தை” என்னும் புண்ணிய பூமியில்; தொன்மையும், கீர்த்தியும் மிக்க சித்திவிநாயகப் பெருமான் ஓங்கார ரூபனாய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயமே எமது ஊரின் அடையாளச் சின்னமாகும்.

இவ் ஆலய மஹோற்சவ விழாவினை இவ் வருடம் முதல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில்; எம்பெருமான் தேரினில் ஆரோகணித்து வீதிவலம் வருவதற்கான சித்திரத் தேர் அமைக்கும் திருப்பணி; போதிய நிதி இன்மையால் இன்னமும் நிறைவு பெறாது தடைபெற்றிருப்பது பெரும் குறையாக அமைந்துள்ளது.

புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான ஆயத்தங்கள் 01.09.2011 அன்று ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை; இத் திருப்பணியை பூர்த்தி செய்வதற்கு சுமார் அறுபத்தி எட்டு லட்சம் ரூபா (68,00000) வரை செலவாகுமெனவும், இத் தேர் தரித்து நிற்பதற்கான கொட்டகையை அமைப்பதற்கு சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை செலவாகுமெனவும் கணக்கிடப் பெற்றுள்ளது.

இத் திருப்பணிக்காக இதுவரையில் சாந்தையை பிறப்பிடமாக கொண்டவர்களும் தற்போது சுவீடனில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. சிவராசா-கமலாதேவி குடும்பத்தினர் மனமுவந்து முப்பது லச்சம் ரூபாவை (30,00000) நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். மிகுதியாக தேவைப்படும் (63,00000) அறுபத்து மூன்று லட்சம் ரூபாவை பொது மக்களிடம் இருந்து பெற்று இத் திருப்பணியை நிறைவு செய்ய எண்ணியுள்ளோம்.

இவ் நன்கொடைகளை தாங்கள் தங்கள் குடும்பத்தின் நேர்த்தியாக அல்லது தங்களை விட்டுப் பிரிந்த குடும்ப உறவுகளின் ஞாபகமாக தேரின் ஒருபகுதியையோ அல்லது தங்களால் இயன்ற பணம், பொருள் வழங்கி நிறைவு செய்வதன் மூலம் சித்தியையும், முக்தியையும் தமது சக்திகளாக கொண்ட சித்தி விநாயகனை சித்திரத் தேரினில் தரிசித்து அவன் திருவருளைப் பெற்று இன்புற்றிருக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் !
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் !
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் !

saanthai-ther-2

தகவல்: சேகர் – சுவிஸ்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்