உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledயாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி இணுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்திலிந்து தெல்லிப்பழை நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வானும் தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும்  மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் தெல்லிப்பழையிலுள்ள கிரேசரில் பணிபுரியும் மயிலணியைச் சேர்ந்தவர்களான குணா மற்றும்  பிரபா ஆகிய இருவருமே இவ்வாறு காயமடைந்தவர்களாவார்.தலை மற்றும் கால் பகுதியில் காயங்கள்  ஏற்பட்டுள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்