உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledதேநீரில் மயக்க மருந்து கொண்டு வர்த்தகர் ஒருவர் அணிந்திருந்த பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று மாலை நெல்லியடிப் பகுதியில்  அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் நடைபெற் றுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்துக்கு வந்த இருவர் வர்த்தகருடன் சிநேகமாக உரையாடியுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் தேநீர் வாங்கிவரு மாறு மற்றவர் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார் அவரும் அருகில் உள்ள தேநீர்சாலையில் “கிளாஸ்’ வாங்கி இன்னொரு கடையில் தேநீர் வாங்கி அதனுள் மயக்க மருந்தைக் கலந்துள்ளார். தேநீர் கடை உரிமை யாளர் குறித்த நபரிடம் என்ன கலக் குகிறாய் என்று கேட்டபோது சம ஹன் என்று பதிலளித்துள்ளார்.அந்தத் தேநீரைப் பருகியதும் கடை உரிமையாளர் மயக்கம் அடைந்துள்ளார். அதனையடுத்து அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், ஒரு தொகைப் பணம் என்பவற்றைச் சுருட்டிக் கொண்டு இருவரும் மறைந்துவிட்டனர். கடை உரிமையாளர் மயக்கமடைந்த நிலையில் பருத் தித்துறை ஆதார வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்