Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட உடனடி தீர்மானம் ஒன்றின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் இணைகின்றனர்.இதன்படி இந்த 30 பேரில் 15 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் 15 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைய இன்னும் ஒருமாதம் இருக்கின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கான அமைச்சர்கள் பட்டியலில், எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் அமரதுங்கை, அநுர பிரியதர்சன யாப்பா அடங்கவில்லை.இதன்பின்னர் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 44 ஆக உயரவுள்ளது. ஏற்கனவே உள்ள 13 பிரதியமைச்சர்களும், 15 மேலதிக பிரதியமைச்சர்கள் இணைகின்றனர்.இதனையடுத்து தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை 23ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து இராஜாங்க அமைச்சர்கள் 10 பேரை நியமிப்பது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.இதன்படி தற்போதுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும் சாத்தியங்கள் உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்