உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledவவுனியா புளியங்குளம் இராமனூர் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த சிறிய ரக வானொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வானில் பயணித்த இருவரும் ஆசனப் பட்டி அணிந்திருந்தமையினால் பாரிய உயிர் ஆபத்திலிருந்து தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்