உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்592_367657109987485_191294493_n 20150131ஓம் சக்தியே! மாரியம்மாவே!
ஓம் சக்தியே! முத்துமாரியம்மாவே!
ஓம் சக்தியே! பணிப்புலத்து அம்மாவே!
ஓம் சக்தியே! எங்கள் அம்மாள் ஆச்சியே!
இன்று நீ ஆவேசம் கொண்டிருப்பதேனம்மா!
உன் பிள்ளைகள் நாங்கள் உனக்கு விட்ட குறை என்னம்மா?

10.08.2014 அன்று என் முன் தோன்றி ஊர் இரண்டுபட்டுக் கிடக்கிறது,ஒன்றுபட வைக்க என்ன எழுதப் போகிறாய்…. என்றாயே தாயே! அன்றிலிருந்து இன்றுவரை என் மனப்போராட்டங்களை நீயே அறிவாயே அம்மா! இந்த நாளிற்குப் பின்னர் நீ அபகரித்துக் கொண்டிருக்கும் ஊர்மக்கள் உயிர்கள் எத்தனை?, எத்தனை? அம்மா!
இதற்கு மேல்,இன்று நீ கனடாவில் நிகழ்த்தியிருக்கும் நிகழ்வானது என்னை மட்டுமன்றி ஊர் மக்கள் அனைவரினதும் உதிரத்தை உறைய வைத்துவிட்டதை நீ அறிவாய் அம்மா! இந்த இரு தாய்மாரின் 31ம் நாள் கிரியையின் பின் உன் அடுத்த குறி யாரம்மா? செய்வதறியாது திகைத்து நிற்கும் உன் பிள்ளைகள் செய்ய வேண்டியதென்னவென்று சொல்லம்மா! தாயே!
ஊர் மக்கள் அனைவரும் பணிப்புலத்தார்,காலையடியார்,சாந்தையார் என்ற பேதங்களை மறந்து நாமெல்லாம் ஒருதாயின் பிள்ளைகளென்று எண்ணி அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் தாயின் ஆலய நித்திய,நைமித்திய கிரியைகளை நிகழ்த்திட முன்வர வேண்டும். இதற்கு அம்பாளிடமிருந்து ஆலயத்தைப் பெற்று நடாத்திக்கொண்டிருக்கும் ஆலய தர்மகர்த்தாக்களும் மக்கள் அனைவரினதும் விருப்பங்களிற்கு மதிப்பளித்து,அனைவரையும் ஒன்றிணத்து ஆலய நிகழ்வுகளை மேற்கொள்ள முன் வரவேண்டும்.அம்பாளிற்கு நடாத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் குறித்த காலத்தில் நடாத்தப்படவில்லையென மக்கள் மனதில் ஓர் ஏக்கம். இதுபற்றி ஆலய தர்மகர்த்தாக்கள் கவனத்தில் எடுத்து ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது ஊருக்கும்,மக்களுக்கும் நன்மையளிக்கும்.
இக் கருத்தை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது நெஞ்சை விட்டகலா நிஜநிகழ்வுகள் போல் என் நினைவில் நிழலாடும் அம்பாளின் அருள்க் கனாக் காட்சிகளும், சில அமானுஷ்ய நிகழ்வுகளுமேயாகும்.எனது இக் கருத்தை ஏற்பவர்கள் ஏற்கட்டும்!,தூற்றுபவர் தூற்றட்டும், வாழ்த்தி வரவேற்பவர் வரவேற்கட்டும்.அனைத்தும் அம்பாளுக்கே!

நன்றியுடன்

அடியவன்

சிவானந்தம்.

8 Responses to “ஓர் ஏக்கம்.”

 • sivanantham:

  ஓம் சக்தி ஓம்!

  இங்கு நான் யாருடைய மனமும் புண்படும்படியோ, அல்லது ஆவேசப்பட வைக்குமளவுக்கோ எதுவும் எழுதவில்லை. எங்கள் குல தெய்வமாம் அம்பாளிடமே வேண்டுதல் விடுத்தேன். விடுத்தமைக்கான காரணத்தையும், விளக்கமாகவே எழுதியுள்ளேன்.
  ஆனால் இங்கு கருத்துரை வழங்கியிருப்பவர்களுக்கு காலம் பதில் கூறும் என்பதே எனது நம்பிக்கை. மேலும்,
  சைவ சமயத்தின் மகிமைகளை உணர்ந்து, இறையருளைப் பெறுவதற்கு, நாயன்மார்கள்,சித்தர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டும் என்பதை கருத்து வழங்கியிருப்பவர்கள் அனைவரும் அறிவர்.எனினும் ஒரு விடயத்தை மட்டும் இங்கு கூற விரும்புகிறேன்.அதாவது எமது மூதாதையர்கள் காலங்காலமாக`இஷ்ட தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு`என இரு வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். குல தெய்வ வழிபாடானது ஒரு ஊர் அல்லது, ஒரு குலத்து மக்கள் தமக்கென மூதாதையர் காட்டிய, வழிபட்ட தெய்வத்தை வழிபடுவது, இஷ்ட தெய்வ வழிபாடென்பது ஒவ்வொரு தனிமனிதரும் அவரவவர் விருப்பத்துக்கேற்ப ஒரு தெய்வத்தைத் தெரிவு செய்து வழிபடுவதாகும். குலதெய்வ வழிபாட்டில் குறையிருப்பின் அக்குல மக்களுக்கு இன்னல்கள் பல சூழும் என சித்தர்களும்,ஞானிகளும் கூறியுள்ளார்கள்.இத்தகைய நிலை இன்றும் இந்தியாவிலுள்ள சில கிராமங்களில் நடைபெறுவதாக செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது.
  எமது தமிழ் மக்களோ இலங்கையை மையமாக வைத்து `இராமாயணம்` ஏன் தோற்றம் பெற்றது என்பதை உணராது,அழிந்துகொண்டிருக்கிறது. அதேபோல் எமதூரில் மூன்று தசாப்தங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வினால் ஏற்பட்ட காழ்ப்புணர்வுகளை களைந்தெறிய மனமின்றி, அம்பாளின் அருட்சக்தியை உணர்ந்துகொள்ளும் சக்தியற்று எமதூர் மக்கள் வாழ்ந்து வருவது எதிர்காலச் சந்ததியினரைப் பாதிக்கவே செய்யும். ஊரிலோ இளஞர்கள் போதைவஸ்து பாவனைகளுக்கு அடிமையாகிவிட்டதாகவும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற எமது எதிர்காலச் சந்ததியினரோ தமிழினப் பண்பாடுகளையோ, சைவநெறி ஒழுக்கத்தினையோ கடைப்பிடிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.
  இவ்வாறான நிலையில் நாம் தொடர்ந்தும் பழமைகளை நினைவில் நிறுத்தி பகைமைகளை வளர்ப்பது எமது எதிர்காலச் சந்ததியைப் பாதுகாத்திட உதவிடுமா?

  ஓம் அஷ்டகீஸ் வாலாம்பிகை புத்திரா வா! வர ஷுவாஹா!

  நன்றி!

 • காணிக்கை என்ன கடவுளுக்கு கையூட்டா??கடவுள் உங்களுக்கு தரவேணுமோ???
  இல்லாவிட்டால் கடவுளுக்கு நீங்கள் கொடுக்க வேணுமோ??கடவுள் உங்களை காப்பாற்றவேணுமோ? இல்லாவிட்டால் நீங்கள் கடவுளை காப்பாற்றபோறீர்களா?
  கண் இருந்தும் பார்க்காத, காதிருந்தும் கேட்காத ;வாய் இருந்தும் பேசாத, தலை இருந்தும்
  சிந்திக்க முடியாத‌ சிலை போல இருக்க போறீர்களா??
  எதையும் நம்பு என்கிறது ஆன்மீகம் . எதையும் சந்தேகி என்கிறது அறிவியல்.
  ஆராயமல் சரணாகதி அடையப்போகிறீர்களா??
  ஏன்?எதற்க்கு ? எப்படி என்று ஆராய்ந்து அறிவின்படிநடக்க போறீர்களா??

  தயவு செய்து சிந்தியுங்கள்!நன்றிகள்

  • அறிவியல் உலகம் உருண்டை என்கிறது
   ஆன்மீகம் தட்டை என்றது.!
   அறிவியல் பூமி சூரியனை சுற்றுகிறது என்றது
   ஆன்மீகம் சொன்னவனை விஷமிட்டு கொன்றது!
   அறிவியல் கிரஹனம் கிரஹங்கள் நேர் கோட்டில் என்றது
   ஆன்மீகம் ராகு கேதுவை விழுங்கல் என்றது!
   அறிவியல் அம்மையை நோயென்றது
   ஆன்மீகம் ஆத்தாவின் கோவமென்றது!
   அறிவியல் குழாயில் குழந்தை கொடுத்தது
   ஆன்மீகம் அரச மரத்தை சுத்த சொன்னது!
   அறிவியல் அனைவரும் சமம் என்றது
   ஆன்மீகம் வருனம் நான்கு என்றது!
   அறிவியல் முயற்சிதான் பலன் என்றது
   ஆன்மீகம் கர்மா ஜாதக ரேகை வாஸ்து என்றது!
   அறிவியல் ஆசை தான் முயற்சியின் பொறி என்றது
   ஆன்மீகம் ஆசை தான் துன்பத்திற்கு காரனம் என்றது!
   அறிவியல் சொல்லும் எல்லாவற்ரையும் அறிவு நம்புகிறது
   ஆன்மீகம் சொல்லும் எதையும் அறிவு நம்ப மறுக்கிறது!
   இருந்தும் அறிவியலை விட ஆன்மீகம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது
   இங்கு சவுகரியமான பொய்களுக்கு கடினமான் உண்மையை விட ஆதரவு அதிகம்

   • . பாமரன்:

    அற்புதண்ணா இ ரண்டாம் தெய்வமென நாம்கருதும் வைத்தியர் கூட கடவுளை வணங்கிக்கொண்டே தன்தொழிலைச் செய்கிறார், அவர் எங்களைக் கூட என்னைவிட கடவளைமே கூட நம்புங்கள் எனக் கூறுகிறார் 1

   • லொள்ளுபாண்டி:

    nice அற்புதன் அண்ணா

 • . பாமரன்:

  ஊரில் ஒரு கெடுதி நடக்கும் பொது அது தெய்வ செயல் என்றே அன்றுமுதல் நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த பாரம்பரியாமாகும் .எனவே அண்ணர் சிவானந்தம் சொல்வதில் எதுவித தவறும் இல்லை என்பதே என்கருத்தும் .ஆலயங்கள் பூசை ஒழுங்காக நடந்தால் மட்டும் போதாது .அங்கு மனிதாபிமானம் வேண்டும் .ஆணவம் அழிய வேண்டும் .இன்று அம்பாள் ஆலையத்தில் ஆணவம் தலை விரித்தாடுவதை யாவரும் அறிவர் .எந்த ஒரு பொதுமகனும் தம் கருத்தை முன்வைக்க ஆலையத்தில் இடமில்லை .அவர்கள் வைத்ததே அங்கு சட்டம் .இது அம்பாளைச் சர்வாதிகார ஆட்சியில் வைத்திருப்பதைக் காட்டுகிறது .பூசகர்களுக்கு ஒரு அரசியல் சட்ட ஆலோசகர் ,அத்துடன் ஒரு அன்னதான போசகர் ,இவர்களே இன்றைய ஆலைய தெய்வங்கள் .மக்களின் விருப்பம் அங்கு இல்லை .மக்கள் தேவையே மகேசன் தேவை .எனவே ஆலையங்கள் முறைப்படி மக்களால் பரிபாலிக்கப் பட்டால் தெய்வ நிந்தனை இருக்காது .மக்கள் மத்தியில் தெய்வ சிந்தனையத் தூண்ட வேண்டும் .கடவுள் காட்டிக் கழிப்பார் என்பார்கள் நம் முன்னோர் .எனவே தெய்வ குறை என்பதைத் தட்டிக் கழிக்க முடியாது

 • சச்சி:

  இதை நான் நினைச்சனான்;மனப்பயம் மன உளைச்சலை கொண்டுவரும் என்று.வாழ்வின் முடிவு என்பது சிவானந்தம் என்ற சகோதரர் அவர்களுக்கும் சச்சி என்னும் அடியேனுக்கும் நிச்சயம் உண்டு.அதை உங்கள் கொள்கைசார் நிகழ்வுகளுக்கு நேரம் பார்த்து பயன் படுத்திக்கொள்ளல் என்பது எவ்வகையில் சாத்தியம் என்றுதான் தெரியவில்லை?அது சரி இறப்பு என்றால் உங்களின் அபிப்பிராயம் என்ன?முடிவு என்பது தானே?அது எல்லோருக்கும் வருவதுதானே?ஒரு வினாடிக்குள் இரு சகோதரிகள் இப்பூவுலகை விட்டு சென்றுவிட்டார்கள் என்றால் அது அம்பாளின் குற்றமா?அம்பாள் என்ன இரக்கம் அற்ற ஒரு ஐம்பொன் சிலையா?என்னை மட்டும் எனக்கு மட்டும் சிறப்பு செய்துகொள்ளுங்கள்.இலையேல் உங்கள் அனைவரின் உயிர்களையும் எடுத்துவிடுவேன் என்பதுதான் அம்பாளின் கொள்கையா?கடவிளை எதுக்கையா அன்பே அற்ற உருவம் ஆக்கிறீர்?

  • சச்சி அவர்களே! உங்கள் மேன்மையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.சிந்திக்க தூண்டும் விதமாக தங்களின் கருத்து அமைந்துள்ளது. எனவே இறைவழிபாடு முறைகளில் ஆண்டவனிடம் சென்று எனக்கு அதைக் கொடு இதைக் கொடு என்று கேட்பது ஒரு வேண்டுதல்.அது தேவையறிந்து திட்டமிடுவதைப் போன்றது தானே.இவ்வுலகில் பொதுவாக அனைவருமே ஆண்டவனிடம் கோரிக்கைகளை வைத்து இறைவனை வணங்குகிறோம். அதற்க்கு ஏற்றது போல் பிரார்த்தனைகளும் செய்கின்றோம்.அதனால் எல்லா மனிதர்களுடைய வேண்டுதல்களும் நிறைவேறிவிடுகிறதா? ஒரு வகையில் பார்த்தால் அடிக்கடி பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் நபர்களில் நீயும் ஒருவன் நானுமொருவன்.ஆகையால் தான் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் அதைக் கொடு இதைக் கொடு! என்று கண்ணீருடன் நாங்கள் எந்தையே நோக்கி கெஞ்சுகின்றோம்..

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்