உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇத்தாலிய நகரமான மிலானில் உள்ள நீதி அரண்மனை என்று அழைக்கப்படும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நீதிபதி ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தத் துப்பாக்கிச் சூட்டினை, மோசடி மற்றும் திவால் வழக்கு ஒன்றின் பிரதிவாதியே நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், அந்த நீதிமன்ற விளாகத்தில் தஞ்சம் புகுந்து இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் ஏஞ்சலீனோ அல்ஃபானோ கூறினார்.பின்னர் மிலானின் வடக்கு பகுதியில் அந்த துப்பாக்கிதாரி பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சூழலில் அங்கிருந்து வழங்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இறங்கி ஓடினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.துப்பாக்கிதாரியை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்ட போது, மூன்றாவதாக இறந்து போன ஒருவருடைய சடலம் கிடைக்கப் பெற்றதாகவும், ஆனால் அவர் எப்படி இறந்தார் எனத் தெளிவாகத் தெரியவில்லை எனவும் இத்தாலிய ஊடகம் ஒன்று கூறுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்