உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesP6DITBS6போலியான ஜேர்மன் கடவுச்சீட்டை பயன்படுத்தி சிங்கப்பூரில் இருந்து பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய அதிகாரிகள் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.31 வயதான சந்தேக நபர் வவுனியா மாங்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இவர் கடந்த 8ம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.308 என்ற விமானத்தில் இலங்கையில் இருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார்.செல்லுப்படியான கடவுச்சீட்டை பயன்படுத்தியே அவர் சிங்கப்பூர் சென்றிருந்தாக விசாரணகளில் தெரியவந்துள்ளது.எனினும் சிங்கப்பூரில் முகவர் ஒருவர் வழங்கிய போலியான ஜேர்மன் கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்துள்ளார்.கடவுச்சீட்டு போலியானது என கண்டறிந்த சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.10 லட்சம் ரூபாவை வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தேக நபருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்