Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 கப்

தண்ணீர் – 3-4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 1

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 3/4 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 1கறிவேப்பிலை -செய்முறை:முதலில் ஓட்ஸை

தாட்சி யில் போட்டு லேசாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு நாண்ஸ்டிக் தாட்சியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து கிளறி, 1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பின் 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். ஓட்ஸானது மென்மையாகும் வரை, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கிளறி விட்டு மூடி வைத்து வேக வைத்து இறக்கி, , ஓட்ஸ் உப்புமா ரெடி!!!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்