தமிழில் எழுத
பிரிவுகள்


untitledசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்தடைந்தார்.அதிமுக தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், செந்தில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், தாமரைச் செல்வன் மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்களும் வந்தனர்.இதனிடையே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தனும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார்.இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீர்ப்பை கொண்டாடினர்.

One Response to “சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை”

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்