உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledபொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றுக்கு சமூகமளிக்காமையாலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது வெளிநாடு சென்றுள்ள ஞானசார தேரர் நாடு திரும்பியதும் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு கடந்த 8ம் திகதி நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி ஞானசாரரைத் தவிர மற்றவர்கள் நீதிமன்றில் ஆஜராகி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.நீதிமன்றில் ஆஜராகாத ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிபதியினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்