தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஈ-சற் பணப்பரிமாற்றம் மூலம் பலரை ஏமாற்றிய ஒருவரை இளவாலைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.யாழ். பண்டத்தரிப்பை சேர்ந்த இருவர் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த சந்தேக நபருக்கு ஈ-சற் முறையில் பணத்தை அனுப்பி ஏமார்ந்தனர்.

அவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தை நீதிமன்றின் அனுமதியுடன் விசாரணைகளை நடத்தியே பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.கைதான நபர் மட்டக்களப்பு கல்முனைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றதுஇவருடன் சேர்ந்து ஏமாற்றிய மற்றொரு நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் பலரிடமும் தந்திரமாகப் பேசி பெருந்தொகைப் பணத்தை ஏமாற்றியுள்ளார். பொலிஸாரும் அவரின் பாணியிலேயே பணம் கொடுப்பவர்கள் போன்று நடித்து அவரைக் கைது செய்தனர். கைதான சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்