உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (92). இவர் இனவெறிக்கு எதிராக போராடிய அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர். இவர் மரணம் அடைந்து விட்டதாக ஒரு இணைய தளத்தில் செய்தி வெளியானதாக தெரிகிறது.

இதனால் தென்ஆப்பிரிக்காவில் வதந்தி பரவியதை தொடர்ந்து பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இந்த தகவலை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை மறுத்தது. மண்டேலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். எனவே, இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்

அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஷெலோ ஹட்டாய் குறிப்பிடுகையில் இது ஒரு வதந்தி எனவும் அமையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதோடு குறித்த இணைதளம் தான் தவறான செய்தியை பரப்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த இணையதளம் பல பிரபலங்கள் மரணம் அடைந்ததாக ஜோக்குகளை வெளியிட்டுள்ளது. பாடகர் சுரேதா பிராங்க்களின், நடிகர்கள் சார்லி ஷீன், ஜானிதிப், மெஹாகன் பிரீமன் ஆகியோர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியிட்டு பின்னர் அது ஜோக் என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்