உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 60 வயதுடைய முதியவர் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,புதிய காத்தான்குடி மூன்றாம் குறிச்சி தக்வா நகரில் வசித்து வரும் ஐந்து வயது சிறுமியொருவர் தனது அயல் வீட்டு பிள்ளைகளுடன சென்று விளையாடி வருபவர்.

இந்நிலையில் வழமை போன்று வியாழக்கிழமை மதியம் அயலிலுள்ள குறித்த அந்த வீட்டுக்கு சென்ற சிறுமியை அந்த வீட்டு உரிமையாளரான 60 வயதுடைய முதியவர் அங்கு நின்ற மாமரத்தில் ஒரு மாங்காயினை பறித்து அந்த சிறுமிக்கு கொடுத்து, சிறுமியை பயமுறுத்தி வீட்டின் கதவுகளை மூடி விட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த சிறுமி அழுது கூக்குரலிட்ட நிலையில் சிறுமிக்கு நூறு ரூபாய் பணத்தினை கொடுத்து யாரிடமும் நடந்த விடயத்தினை சொல்ல வேண்டாமென கூறி சிறுமியை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

சிறுமி அழுது கொண்டு ஓடி வந்து நடந்த விடயத்தினை தனது தாயிடம் கூற தாய் அயலவர்களை அழைத்து விடயத்தைக் கூறியுள்ளார்.

பின்னர் அயலவர்கள் ஒன்று திரண்டு குறித்த முதியவரை தேடி அவரின் வீட்டுக்கு சென்ற போது முதியவர் வீட்டை மூடி விட்டு பின் கதவினால் ஓடிச் சென்று பாழடைந்த வீடொன்றுக்குள் ஒழிந்து நின்றுள்ளார்.

பின்னர் அவரை தேடிச் சென்ற அயலவர்கள் அவரை மடக்கிப்பிடித்து காத்தான்குடி பொலிசாரை சம்பவ இடத்திற்கு வர வரவழைத்து குறித்த சந்தேக நபரான முதியவரை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைக்க பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தெடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்