Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஇலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கை தமிழர்கள் 3 பேரை காவல் துறையினர்  கைது செய்துள்ளனர்.இதன்போது அவர்களிடமிருந்து இந்திய ரூபா ஒரு கோடி மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இராமேஸ்வரம் அருகே மண்டபம் தோணித்துறை கடற்கரையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராமநாதபுரம் கியூ பிரிவு காவற்துறை பொறுப்பதிகாரி கென்னடி தலைமையிலான குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் போது அங்கு பதுங்கி இருந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மண்டபம் மற்றும் குடியாத்தம் அகதிகள் முகாமில் தங்கி இருந்து, கள்ளதோணியில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு,மண்டபம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்