உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பாகிஸ்தானில் பெஷாவர் நகரக்கு அருகே சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் அதில் இருந்த 18 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 9 பேர் படுகாயமுற்றனர்.

கைபர் – பக்துன்குவா மாகாணங்களை இணைக்கும் ஹாங்கு என்ற நகருக்கு அருகேயுள்ள அலிஜாய் ஜோசாரா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ள காவல் துறையினர் பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பிற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

பிடிஐ செய்தியாளரிடம் பேசியுள்ள மாவட்ட காவல் அதிகாரி அப்துர் ரஷீத், சிற்றுந்தில் கொண்டு செல்லப்பட்ட எரிவாயு உருளைகள்தான் வெடித்துள்ளன என்று கூறியுள்ளார்.

ஆனால், மற்றொரு காவல் அதிகாரி, இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்கும் என்றும், சிற்றுந்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

பயணிகள் சென்ற சிற்றுந்து, ஒரு சரக்குந்தின் மீது மோதியபோதுதான் வெடிப்பு நிகழ்ந்ததாக அங்குள்ள மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் புலனாய்வு செய்து வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்