உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை மாங்குளம் – கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பருடன் குறித்த பஸ் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை பஸ்ஸில் பயணித்த அனைத்துப் பயணிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காயமடைந்தவர்களில் 21 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்தில் காயமடைந்த பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்