Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றின் மூலம் மன்னாருக்கு சுமார் 26 கிலோகிரம் எடை கொண்ட கஞ்சாவினை கடத்திய இருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் கே.ஜீவரானி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மன்னார் சௌத்பார் கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருந்த படகினை அப்பகுதியில் கடமையில் இருந்த கடற்படையினர் நிறுத்தி சோதனையிட்ட போது குறித்த படகின் முன்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 கிலோ நிறை கொண்ட கஞ்சாப்பொதியினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் படகில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்தனர்.

மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து இரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்