உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஅவுஸ்திரேலியா பின்பற்றி வரும் கடுமையான புதிய குடியேற்ற கொள்கையினால் தான், 2 அவுஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு மனித உரிமை ஆணைய தலைவர் கில்லியன் ட்ரிக்ஸ் கூறியதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அவுஸ்திரேலியர்களின் மரண தண்டனைக்கு புதிய குடியேற்ற கொள்கை காரணம் அல்ல என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட 2 அவுஸ்திரேலியர்கள் உள்பட 7 வெளிநாட்டினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச அளவில் இதற்கு பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தோனேசியாவில் இருந்து தனது தூதரை அவுஸ்திரேலியா திரும்ப பெற்றது.

அவுஸ்திரேலியா பின்பற்றி வரும் கடுமையான புதிய குடியேற்ற கொள்கையினால் தான், 2 அவுஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு மனித உரிமை ஆணைய தலைவர் கில்லியன் ட்ரிக்ஸ் கூறியதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அதில், அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள். ஆனால், இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என நாம் நினைத்ததுண்டா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், கில்லியன் ட்ரிக்சின் இந்த கருத்தை அவுஸ்திரேலிய அரசு மறுத்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது என கூறியுள்ள குடியுரிமைத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், இந்த கருத்து அவுஸ்திரேலிய அரசு, பொதுமக்கள் மற்றும் கொல்லப்பட்ட 2 பேரின் குடும்பத்தினருக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்