உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledபிரான்ஸ் நாட்டில் தந்தை ஒருவர் குழந்தையை மறந்து காரிலேயே விட்டுவந்ததால் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக பலியானது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் ரென்னிஸ்(Rennes) நகரில் உள்ள பொறியியல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.இந்நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை அலுவலகத்தில் விட்டுவிட்டு வந்தார்.

பின்னர் காரில் இருந்த தனது குழந்தையை மழலையர் பள்ளியில் இறக்கிவிடாமல் வீடு திரும்பியுள்ளார்.குழந்தை காரில் இருப்பதை மறந்து தனது வேலைகளை பார்க்க தொடங்கினார்.இந்நிலையில் மாலையில் அவரது மனைவி குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துவரும்படி நியாபகப்படுத்தியுள்ளார்.

அப்போது தான் அவருக்கு குழந்தையின் நினைவு வந்தது.பின்னர் சென்று காரில் பார்த்தபோது குழந்தை இறந்துகிடந்தது.இதனால் அவரை பொலிசார் கைதுசெய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் குழந்தையின் தந்தை தொடர் வேலைகள் காரணமாக சோர்வு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்